உசிலம்பட்டி அருகே வீடு புகுந்து 22 பவுன் கொள்ளை

உசிலம்பட்டி அருகே வீடு புகுந்து 22 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள ஒத்தவீடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 38). இவரது மனைவி பெருமாயி.

சம்பவத்தன்று பெருமாயி வீட்டில் பீரோவிலிருந்த பொருட்களை ஒழுங்குபடுத்தினார். அப்போது பீரோவிலிருந்த நகைகளை வெளியே எடுத்து வைத்திருந்தார். அந்த சமயத்தில் திடீர் வேலை காரணமாக அவர் வெளியே புறப்பட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் நைசாக புகுந்து வெளியே இருந்த 22 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

சிறிது நேரத்தில் வீடு திரும்பிய பெருமாயி நகை திருடுபோயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com