காஞ்சீபுரத்தில் அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம்- போலீசார் விசாரணை

காஞ்சீபுரத்தில் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரத்தில் அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம்- போலீசார் விசாரணை
Published on

வேளச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விமல். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் பெண் வெல்லா என்பவரை திருமணம் செய்தார். இருவரும் வேளச்சேரியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் வெல்லா காஞ்சீபுரம் அருகே வெள்ளைக்கேட் பகுதியில் ஆடைகள் கிழிந்த நிலையில் அலங்கோலமாக போதையில் சுற்றிக்கொண்டு இருந்தார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெல்லாவை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

போதை தெளிந்த பிறகு போலீசார் விசாரணை நடத்தினர். கணவர் விமலுக்கும், வெல்லாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விமல் வீட்டிலேயே போதை பொருள் பயன்படுத்தி வந்ததாலும் தற்போது வேலையில்லாமல் இருந்ததாலும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

சம்பத்தன்று இருவரும் போதையில் இருந்தனர். மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த விமல் காரில் வெல்லாவை வெளியே அழைத்து சென்று இருக்கிறார். காஞ்சீபுரம் வெள்ளைக்கேட் பகுதியில் சென்றபோது காரில் இருந்து வெல்லாவை கீழே தள்ளி விட்டு சென்று விட்டார்.

அங்கு போதையில் சுற்றிய வெல்லாவை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் சிலர் அவரை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல்பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் அவரை காஞ்சீபுரம் வெள்ளைக்கேட் அருகே விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார் வெல்லாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு விமல் இல்லை. வீடு காலியாக இருந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காஞ்சீபுரம் போலீசார் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக 3 ஆட்டோ டிரைவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கணவர் விமலையும் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com