

வாஷிங்டன்:
சிரியா - ஈராக் எல்லையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ராணுவ விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்கில் உள்ள அல்-காம் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஏழு வீரர்களும் பலியாகியுள்ளனர்.
தகவல் அறிந்து மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அமெரிக்க பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tamilnews