ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல் 21 தலிபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 21 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #USdrone #PakistaniTaliban #Afghanistan
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல் 21 தலிபான் பயங்கரவாதிகள் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குனார் மாகாணம், பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ளது. அங்கு தடை செய்யப்பட்ட தலீபான் உள்ளிட்ட இயக்கங்களின் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களுல் ஒருவரான முல்லா பஸ்லுல்லாவுக்கு சொந்தமான இடத்தை இலக்காக வைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நேற்று தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில் 21 தலிபான் பயங்கரவாதிகள் பலியாகினர். இந்த தாக்குதலில் முல்லா பஸ்லுல்லா தப்பிவிட்டதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை தலிபான் தளபதிகளும், பாகிஸ்தான் அரசினரும் உறுதிசெய்துள்ளனர்.

அப்பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த அமெரிக்கா இந்த தாக்குதலை துல்லியமாக நடத்தி முடித்துள்ளது. #USdrone #PakistaniTaliban #Afghanistan #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com