ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு 200 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்குவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
Published on

வாஷிங்டன்:

ஐக்கிய அரபு எமிரேட்களுக்கு 160 ஏவுகணைகளை சுமார் 200 கோடி அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் அரசு சார்பில் 60 பேட்ரியாட் ஏவுகணைகள், 100 பேட்ரியாட் கைடடு அதிநவீன ஏவுகணைகள் மற்றும் இதர ராணுவ உபகரணங்கள் உள்ளிட்டவை அமெரிக்காவிடம் கோரப்பட்டிருந்ததாக பாதுகாப்பு துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் இடையேயான ஒப்பந்தம் வெளிநாட்டு உறவு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த வழி செய்வதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com