ஆப்கானிஸ்தான் - அமெரிக்க கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களை மீட்கும் மீட்புக் குழுவினர்
காயமடைந்தவர்களை மீட்கும் மீட்புக் குழுவினர்
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் ஷிண்டாநாத் மாவட்டத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com