மத்திய ஆயுதப்படையில் உதவி கமாண்டர் பணி - பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள 398 உதவி கமாண்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டாதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #UPSC
மத்திய ஆயுதப்படையில் உதவி கமாண்டர் பணி - பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு
Published on

புதுடெல்லி:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய ஆயுதப்படை இயங்கி வருகிறது. இங்கிருந்து வீரர்கள் எல்லை பாதுகாப்பு படை, சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை மற்றும் எஸ்எஸ்பி ஆகிய படைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், மத்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள 398 உதவி கமாண்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்துள்ளது. வரும் 21-ம் தேதிக்குள் யு.பி.எஸ்.சி இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி, உடற்தகுதி உள்ளிட்ட மற்ற தகவல்கள் யு.பி.எஸ்.சி இணையதளத்தில் (www.upsc.gov.in)வெளியிடப்பட்டுள்ளன.

#UPSC

X

Maalai Malar
www.maalaimalar.com