மேம்படுத்தப்பட்ட அப்ரிலியா SR 150: டிசம்பரில் வெளியாகலாம் என தகவல்

அப்ரிலியா SR 150 ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
மேம்படுத்தப்பட்ட அப்ரிலியா SR 150: டிசம்பரில் வெளியாகலாம் என தகவல்
Published on

புதுடெல்லி:

ஆட்டோ எக்ஸ்போ 2016-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட அப்ரிலியா SR 150 அனைவரையும் கவர்ந்தது. இதைத் தொடர்ந்து விலை அறிவிக்கப்பட்டதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவில் ரூ.65,000 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட அப்ரிலியா SR 150 பெரும்பாலானோர் தேர்வாக அமைந்தது. 

அதிக திறன் கொண்டு எளிமையாய் கண்ட்ரோல் செய்யக் கூடிய அப்ரிலியா SR 150 கணிசமான விற்பனையை பெற்றது. சந்தையில் நல்ல வரவேற்பை பெற்ற போதும், அப்ரிலியா SR 150 சஸ்பென்ஷன் அமைப்பு குறித்து சிலர் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அந்த வகையில், சமீபத்தில் வெளியான தகவல்களின்படி மேம்படுத்தப்பட்ட அப்ரிலியா SR 150 விரைவில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட அப்ரிலியா SR 150 மாடலில் மாற்றக்கூடிய முன்பக்க சஸ்பென்ஷன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. டிசம்பர் மாத வாக்கில் புதிய அப்ரிலியா SR 150 வெளியிடப்படும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முன்பக்க ஃபோர்க் தவிர அதிகப்படியான மாற்றங்கள் புதிய மாடலில் மேற்கொள்ளப்பட அதிக வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது. இம்முறை வெளியாக இருக்கும் அப்ரிலியா SR 150 விலை இந்தியாவில் முந்தைய மாடலை விட ரூ.5,000 வரை கூடுதலாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைசிறந்த செயல்திறன், அழகான தோற்றம் கொண்டுள்ள அப்ரிலியா மற்ற ஸ்கூட்டர்களை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிந்தாலும், புதிய மாற்றக்கூடிய ஃபோர்க் வழங்கப்படுவதால் அதிகம் பேர் விரும்பக் கூடிய வகையில் இந்த மாடல் இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com