புரோ கபடி - தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி.யோத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது

புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் யுபி யோத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
பாயிண்ட் எடுத்த மகிழ்ச்சியில் டைட்டன்ஸ் வீரர்
பாயிண்ட் எடுத்த மகிழ்ச்சியில் டைட்டன்ஸ் வீரர்
Published on

மும்பை:

புரோ கபடி போட்டி 7வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் மும்பையில் நேற்று இரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-உ.பி.யோத்தா அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை எடுத்து வந்தன. இதனால் பலமுறை இரு அணிகளும் சமநிலை வகித்தன. இதனால் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் 11-11 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தன.

இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் அடுத்தடுத்து புள்ளிகள் எடுத்தன. ஆட்டத்தின் இறுதிவரை திரில்லிங்காக சென்றது.

ஆட்டத்தின் கடைசி ரைடில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி செய்த தொழில்நுட்ப தவறால் ஒரு புள்ளியை இழந்தது. இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 20-20 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணியை 32 - 20 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது யு மும்பா அணி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com