புரோ கபடி - பெங்கால் வாரியர்சை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது உபி யோதா

பெங்களூருவில் நேற்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது உபி யோதா அணி.
புள்ளி எடுக்கும் முயற்சியில் உ.பி. யோதா அணி
புள்ளி எடுக்கும் முயற்சியில் உ.பி. யோதா அணி
Published on

பெங்களூரு:

புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி. யோதா, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே இரு அணிகளும் தொடர்ந்து புள்ளிகளை எடுத்து வந்தன. இறுதியில், உ.பி. யோதா 32 - 29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் உ.பி. யோதா அணி ஏழாம் இடத்தில் உள்ளது.

மற்றொரு போட்டியில், தமிழ் தலைவாஸ் அணியை 33-27 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்றாம் இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com