உ.பி.யில் மழை நீடிப்பு- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

உத்தர பிரதேசத்தில் மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
Published on

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பிரயாக்ராஜ், உன்னாவ், கோரக்பூர், பிலிபிட் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான குடிசை வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளன. மழை தொடர்பான  விபத்துக்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com