மத்திய-மாநில அரசுகளால் உ.பி.க்கு எந்த ஆதாயமும் இல்லை - மாயாவதி பாய்ச்சல்

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு மாநிலத்திலும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் உத்தரப்பிரதேச மக்களுக்கு எவ்வித ஆதாயமும் இல்லை என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய-மாநில அரசுகளால் உ.பி.க்கு எந்த ஆதாயமும் இல்லை - மாயாவதி பாய்ச்சல்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மற்றும் மாநில அரசுகளால் உ.பி.க்கு எவ்வித ஆதாயமும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க தலைவர் அமித் ஷா இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியதை சுட்டிக் காட்டிய மாயாவதி, ‘அவர் மோடியின் தரமற்ற வேலையை வெற்றி என்று நினைத்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

மேலும் யோகி ஆதித்யநாத்தின் அரசைப் பற்றி மாயாவதி கூறுகையில், யோகி ஆட்சிக்கு வந்த பின்னர் பல குற்றங்கள் நடைபெறுகிறது, இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்தார்.

‘மேலும் மத்திய அரசால் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. பா.ஜ.க. அரசு மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் மக்களிடம் கூறிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்ற வில்லை‘ எனவும் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com