

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசில் சிறைத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெய் குமார் சிங்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜலான் மாவட்டம் உராயில் உள்ள ஒரு விவசாயி தனது நிலத்தில் கடந்த வாரம் கோதுமை, கடுகு பயிருக்கான விதைகளை விதைத்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் இன்று கோசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
இதற்காக மாநில சிறைத்துறை மந்திரி ஜெய்குமார் சிங், 35 கார்கள் அணிவகுப்புடன் பயிர் விதைத்த நிலம் வழியாக சென்றுள்ளார். விதைப்பு விதைத்து ஒருவார காலம் ஆகி, விதைகள் முளைக்கவிருந்த நிலையில் வாகனங்கள் அதன் மீது ஓட்டப்பட்டது விவசாயியை பெரும் கவலையடைய செய்து உள்ளது.
மந்திரியிடம் கெஞ்சும் விவசாயி
மந்திரியின் காலில் விழுந்து, தன்னுடைய விதைப்பு அழிந்தது தொடர்பாக கூறி அழுது உள்ளார். விவசாயியை எழ செய்த மந்திரி மீண்டும் காருக்குள் சென்றுவிட்டார். மந்திரியுடன் சென்றவர்கள் மட்டும் விவசாயிக்கு 4 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்கி உள்ளனர். பின்னர், அவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் சென்றுவிட்டனர். விவசாயின் விதைப்பு அழிக்கப்பட்டது பல்வேறு தரப்பில் எதிர்ப்பை எழ செய்து உள்ளது.
மந்திரி ஜெய்குமார் சிங் பேசுகையில், இது தெரியாமல் நடந்துவிட்டது, இப்பகுதியில் வளர்ந்த பயிர்கள் எதுவும் கிடையாது என கூறிஉள்ளார்.