உத்தரபிரதேசத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை-2 மகன்கள் மற்றும் வேலைக்காரர் விஷவாயு தாக்கி இறந்தது அக்கம்பக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மொரதாபாத்:

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் அருகே உள்ள ராஜ்பூர் கேசரியா கிராமம். இங்கு ராஜேந்திரன் (வயது50) என்பவரது வீட்டில் தரைக்கு அடியில் சிமெண்டு தொட்டியில் சாண கழிவுகளை கொட்டி வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் இரவில், ராஜேந்திரன், அவரது மகன்கள் கர்கேஸ்(30), பிரீத்தம்(25) மற்றும் கூலி தொழிலாளி ரமேஷ் ஆகியோர் அந்த தொட்டியை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி மயங்கி விழுந்துள்ளனர். ராஜேந்திரனின் மனைவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 4 பேரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை-2 மகன்கள் மற்றும் வேலைக்காரர் விஷவாயு தாக்கி இறந்தது அக்கம்பக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com