உ.பி. சிறைக்குள் கொடூர கொலை- விசாரணைக்கு உத்தரவிட்டார் முதல்வர் யோகி

உத்தர பிரதேசத்தில் மாபியா கும்பல் தலைவன் சிறை வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். #GangsterMunnaBajrangi #GangsterShotDead
உ.பி. சிறைக்குள் கொடூர கொலை- விசாரணைக்கு உத்தரவிட்டார் முதல்வர் யோகி
Published on

உத்தர பிரதேச மாநிலத்தில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி ஜான்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக முன்னா பஜ்ரங்கியை இன்று காலை பக்பத் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஜான்சி சிறைச்சாலையில் இருந்து சனிக்கிழமை பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார்.  

அங்கிருந்து இன்று காலை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே அழைத்து வந்த முன்னாவை மற்றொரு கைதி சுட்டுக்கொன்றான். இந்த சம்பவம் சிறை வளாகத்தில் திடீர் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. முன்னா கொலை செய்யப்பட்டதையடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. மோப்பநாயுடன் விசாரணைக்குழுவினர் சிறைச்சாலைக்கு விரைந்தனர்.

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளையும் அதன் தலைவர்களையும் முன்னா ஆதரித்ததால், அவரை போலீசார் என்கவுண்டரில் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருப்பதாக அவரது மனைவி ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் இந்த கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com