பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: உ.பி. முதல் மந்திரி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: உ.பி. முதல் மந்திரி
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் ஜக்பால் சிங் வீர மரணம் அடைந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ஜக்பால் சிங், உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர் ஜக்பால் சிங்கின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மாநில போக்குவரத்து துறை மந்திரி ஸ்வதந்திர தேவ் சிங், ஜக்பால் சிங் வீட்டுக்கு இன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அத்துடன், அவரது மனைவியிடம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், ஜக்பால் சிங் பெற்றோரிடம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.#tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com