உ.பி.யில் மேலும் அதிக முதலீடு செய்ய அடானி, அம்பானி, பிர்லா விருப்பம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிதாக தொழில் தொடங்க 4.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 1045 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
உ.பி.யில் மேலும் அதிக முதலீடு செய்ய அடானி, அம்பானி, பிர்லா விருப்பம்
Published on

உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் நடைபெறும் இருநாள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரபல தொழிலதிபர்கள் கவுதம் அடானி, முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே நடந்துவரும் தொழில்களில் கூடுதலாக முதலீடு செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, ஜியோ அலைபேசி நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி எதிர்வரும் மூன்றாண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டின் வெற்றி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், முதல் நாளான இன்று சுமார் 500 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றதாகவும், 4.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 1045 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com