உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் ஜெயிலில் 23 கைதிகளுக்கு எய்ட்ஸ்

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் கைதிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 23 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு (எய்ட்ஸ்) இருப்பது தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் ஜெயிலில் 23 கைதிகளுக்கு எய்ட்ஸ்
Published on

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு 1800 கைதிகள் உள்ளனர். கைதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி தற்போது அனைத்து கைதிகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1400 கைதிகளுக்கு பரிசோதனை முடிந்துள்ளது. இன்னும் 400 கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற வேண்டியது இருக்கிறது.

இந்த நிலையில் பரிசோதனை நடத்தப்பட்ட 1400 கைதிகளில் 23 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு (எய்ட்ஸ்) இருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் பெண்.

ஒரே ஜெயிலில் 23 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களுக்கு எப்படி இந்த நோய் பரவியது என்று தெரியவில்லை.

இதுபற்றி ஜெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஜெயிலுக்குள் எய்ட்ஸ் நோய் பரவி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் ஏற்கெனவே இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜெயிலுக்கு வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

ஜெயில் கைதிகளுக்கு எந்தவித நோய் பாதிப்புகளும் பரவாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com