வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்

ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய வடகொரியாவின் அத்துமீறலுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்
Published on

வடகொரியா சமீபத்தில் 6-வதுதடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

அதன் பிறகாவது வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் அணுஆயுத சோதனையை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடகொரியா தன்நிலையில் இருந்து மாறவில்லை. மாறாக நேற்று மீண்டும் ஒரு ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது.

சுமார் 3200 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணை வடகொரியாவின் சுனான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செலுத்தப்பட்டு, ஜப்பான் நாட்டின் மீது பறந்து சென்று, பசிபிக் கடலில் விழுந்தது. ஜப்பான் நாட்டில் உள்ள குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து, மிரட்டுவதற்காக இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com