பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கொடுத்த பெண் -கார் விபத்தில் சிக்கி கவலைக்கிடம்

உத்தரபிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கொடுத்திருந்த பெண் கார் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் கவலைக்கிடமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக எம்எல்ஏ குல்தீப் சாகர்
பாஜக எம்எல்ஏ குல்தீப் சாகர்
Published on

உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரில், பணி தொடர்பாக விசாரிக்க குல்தீப்பின் உதவி தேடி அவரது வீட்டிற்கு அப்பெண் சென்றுள்ளார். அங்கு, குல்தீப் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதற்காக நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன் அப்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது அவர் வந்த கார் மீது லாரி மோதியது. இதில் அவரது தாய், உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் அப்பெண்ணின் தந்தை கடந்த ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com