கைது
கைது

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது

உசிலம்பட்டி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
Published on

மதுரை:

உசிலம்பட்டியை அடுத்த முண்டுவேலன்பட்டியை சேர்ந்தவர் பாண்டிசெல்வி (வயது 28). இவரது கணவர் தங்கப்பாண்டி (35). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தங்கப்பாண்டி-பாண்டி செல்வி திருமணத்தின் போது 6 பவுன் நகை, ரூ.1 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தங்கப்பாண்டி மேலும் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தினார்.

எனவே பாண்டிச்செல்வி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் தங்கப்பாண்டி மனைவிக்கு தெரியாமல் அமுதா என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார்.

இதற்கு அவரின் குடும்பத்தை சேர்ந்த குணசேகரன் மனைவி பாண்டிச்செல்வி, தங்கப்பாண்டி சகோதரி பாண்டீஸ்வரி மற்றும் அமுதா ஆகியோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாண்டிசெல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தங்கப் பாண்டியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com