கென்யா: துணை அதிபர் வீட்டில் துப்பாக்கி சூடு

கென்யா துணை அதிபரான வில்லியம் ரூடோ வீட்டில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கென்யா: துணை அதிபர் வீட்டில் துப்பாக்கி சூடு
Published on

கென்யா நாட்டின் துணை அதிபராக இருப்பவர் வில்லியம் ரூடோ. இவரது வீடு நைரோபியில் இருந்து 312 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே எல்டோரெட் நகரின் அருகில் அமைந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துணை அதிபர் வில்லியம் ரூடோ வீட்டின் அருகே திரண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த துப்பாக்கிகளால் திடீரென சரமாரியாக சுட்டனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்புக்கு நின்ற காவல் அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com