ரோலர் கோஸ்டர் திடீர் பழுது - 100 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய பயணிகள்

ஜப்பானில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ரோலர்கோஸ்டர் இயந்திரம் பழுதானதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிகொண்டிருந்த பயணிகள் சுமார் 2 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டுள்ளனர். #rollercoaster #Japan
ரோலர் கோஸ்டர் திடீர் பழுது - 100 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய பயணிகள்
Published on

ஜப்பானின் ஓசாகா நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர்கோஸ்டர் விளையாட்டில் ஏராளமானோர் ஈடுபட்டனர். அப்போது 64 பேர் கொண்ட குழுவினர் ரோலர்கோஸ்டரில் பயணிக்கும் போது தலைகீழாக திரும்பிய நிலையில் அந்த இயந்திரம் செயலற்றுப் போனது.

இயந்திரம் பழுதானதால் 100 அடி உயரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதனால் உயிருக்குப் பயந்து அலறியவர்களை மீட்புப் படையினர் நிதானமாக மீட்டனர். கிட்டத்தட்ட இந்த மீட்புப் பணி 2 மணி நேரம் நீடித்ததால் அதுவரை ரோலர்கோஸ்டரில் பயணித்தவர்கள் தலைகீழாக தொங்கிய வண்ணம் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com