கொரோனாவில் இருந்து மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் குணமடைந்தார்

மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.
மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக்
மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக்
Published on

பனாஜி:

மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் கடந்த மாதம் 12-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கோவாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சைக்கு பின் மந்திரி ஸ்ரீபாத் நாயக் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து, அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில், இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். அடுத்த சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு எனது பணியை தொடங்குவேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com