அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடக்கம் - நிதி அமைச்சகம்

அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி:

ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2021- 2022ம் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பதற்காக வரும் 16-ம் தேதி முதல் அதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை ஈடுகட்டும் வகையில், பட்ஜெட் தயாரிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் மத்திய அரசின் நிதி செயலாளர்கள், செலவுச் செயலாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

நவம்பர் முதல் வாரம் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டங்களில், மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com