சேதுபாவாசத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்- போலீசார் விசாரணை

சேதுபாவாசத்திரம் அருகே 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண் பிணம்
ஆண் பிணம்
Published on

பேராவூரணி:

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சம்பைபட்டினம் மரக்காவலசை கிராம எல்லையில் அடையாளம் தெரியாத தூக்குப்போட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் ஜெயலட்சுமி  மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் (மரக்காவலசை) கார்த்திக், (சம்பைபட்டினம்) செந்தில் ஆகியோர் உடனடியாக அங்கு சென்றனர்.  

இதற்கிடையே சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் வீர.அண்ணா துரை மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இறந்து கிடந்த ஆண் உடலை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

இறந்து கிடந்த நபருக்கு சுமார் 40 வயது இருக்கலாம். அவர் யார்? எந்த ஊர்? கொலையா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com