வல்லம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை

வல்லம் அருகே அடையாளம் தெரியாத 46 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வல்லம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை
Published on

வல்லம்:

வல்லம் அருகே உள்ள முன்னையம்பட்டி கிராமத்தில் திருச்சி- தஞ்சை சாலையோரம் அடையாளம் தெரியாத 46 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே வல்லம் போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். 

அதில் அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டனர். இது பற்றி விசாரித்ததில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்பது பற்றிய எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து அவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com