மாரண்ட அள்ளி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

மாரண்ட அள்ளி பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாரண்ட அள்ளி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள மாரண்ட அள்ளி பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த பகுதி பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து அந்தபகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மாரண்டஅள்ளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com