ஓசூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

ஓசூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆர்.சி. சர்ச் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் ஒருவர் இறந்தவரை பார்த்ததும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாதவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com