தெற்கு சூடான்: பெற்றோரை பிரிந்த குழந்தைகளை குடும்பத்தினருடன் சேர்க்க உதவும் யுனிசெப்

தெற்கு சூடானில் பெற்றோரிடமிருந்து பிரிந்த குழந்தைகளை மீண்டும் பெற்றோருடன் சேர்க்கும் பணியில் யுனிசெப் மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
தெற்கு சூடான்: பெற்றோரை பிரிந்த குழந்தைகளை குடும்பத்தினருடன் சேர்க்க உதவும் யுனிசெப்
Published on

ஜூபா:

தெற்கு சூடானில் 2013ம் ஆண்டு முதல் நடைபெற்று கொண்டிருக்கும் உள்நாட்டுச் சண்டை காரணமாக ஏராளமான மக்கள் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோரை விட்டு பிரிந்து அகதிகளாக வந்த பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும் உள்ளனர். அந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களுடன் இணைக்கும் பணியை யுனிசெப் மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன.

குழந்தைகள் பெற்றோருடன் இருப்பதே சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. அவர்களின் அரவணைப்புடன் குழந்தை வளர்வதே சரியானதாகும். அதற்கான பணியில் யுனிசெப் பணியாற்றி வருகிறது என யுனிசெப் பிரதிநிதி மாகிம்போ மடோ, நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

‘யுனிசெப் முயற்சியால் இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் குடும்பத்துடன் இணைக்கப்பட்டு உள்ளனர். பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், தொலை தொடர்பு குறைவான பகுதிகளும் அதிக அளவில் உள்ளன. அந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளை கண்டறிவது மிகவும் சவாலான பணியாகும்.

குடும்பத்தினருடன் இணைவதற்காக 16 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களை சேர்ப்பதற்கான அனைத்து முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவர்கள் குடும்பத்துடன் இணைக்கப்படுவார்கள்’ என மாகிம்போ கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com