

சென்னை:
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய முனையத்தில் இன்று மாலை சக்கர நாற்காலியில் கேட்பாரற்று ஒரு மர்மப்பை கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசர தகவல் வந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். #tamilnews #chennaiairport