அமெரிக்கா, தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் - ஐநா பொது செயலாளர் வரவேற்பு

அமெரிக்கா, தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு ஐ.நா.சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அண்டோனியோ குட்டரஸ்
அண்டோனியோ குட்டரஸ்
Published on

ஐ.நா.சபை:

ஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவும், தலிபான் பயங்கரவாத அமைப்பும் ஒப்புதல் அளித்தன.

அங்கு ஒரு வார காலம் சண்டை நிறுத்தம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது.

இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா மற்றும் தலிபான் அமைப்பினர் இடையே அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு ஐ.நா.சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஐ.நா. சபை பொது செயலாளரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்கா, தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கத்தாரில் கையெழுத்தானது. இந்த அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதற்கு ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com