பீகார், உ.பி.யில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் இரங்கல்

உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மழை தொடர்பான விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு ஐ.நா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
ஐ.நா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
Published on

நியூயார்க்:

உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்கு ஐ.நா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்ளார்.

“உ.பி. மற்றும் பீகாரில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டும். மீட்புப்பணிகளில் அரசுடன் இணைந்து செயலாற்றவும், தேவையான உதவிகள் செய்யவும் ஐ.நா. தயாராக இருப்பதாக அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்” என ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com