உளுந்தூர்பேட்டை தபால் நிலையம் முன்பு ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை தபால் நிலையம் முன்பு ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

உளுந்தூர்பேட்டை:

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை தபால் நிலையம் முன்பு ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கவுதம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், திருநாவலூர் ஒன்றிய செயலாளர் கணேஷ் குமார், வக்கீல் வெங்கடேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் ஜெய்சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் பழனி, பாஷா, முருகன், சிவகுமார், சுரேஷ், சுகுமார், மணிகண்டன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com