உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை- போலீசார் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை- போலீசார் விசாரணை
Published on

உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டை எல்லையான குளாம் தக்கா என்ற இடத்தில் பாஷா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

அங்குள்ள மரத்தின் அடியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து எலவனாசூர் கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த பெண்ணின் உடலை பார்த்தனர்.

அவரது உடல் முழுவதும் எரிக்கப்பட்டு, அழுகியநிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை. யாரோ மர்ம மனிதர்கள் இளம்பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடல் மீது மண் எண்ணை ஊற்றி எரித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com