உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 65). தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் குமாராசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குமாரசாமியின் மனைவி பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com