அசாமில் எரிவாயு குழாய் குண்டு வைத்து தகர்ப்பு - உல்பா பயங்கரவாதிகள் அட்டூழியம்

அசாம் மாநிலம் சார்டியோ மாவட்டத்தில் உள்ள டிக்காட் பகுதியில் உள்ள எரிவாயு குழாய் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
அசாமில் எரிவாயு குழாய் குண்டு வைத்து தகர்ப்பு - உல்பா பயங்கரவாதிகள் அட்டூழியம்
Published on

கவுகாத்தி:

அசாம் மாநிலம் சார்டியோ மாவட்டத்தில் உள்ள டிக்காட் பகுதியில் உள்ள எரிவாயு குழாய் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதி தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்த சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட உல்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் என அந்த அமைப்பு அறிவித்து உள்ளது.கடந்த 24-ந்தேதி இந்த மாவட்டத்துக்கு அருகில் உள்ள திப்கார்க் மாவட்டத்தில் எண்ணெய் குழாய் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இது தொடர்பாக உல்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com