குடியேற்ற விவகாரத்தில் முறைகேடு - பிரிட்டன் உள்துறை மந்திரி ஆம்பர் ரூத் ராஜினாமா

நீண்ட நாள் பிரிட்டன் வாசிகளை சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், உள்துறை மந்திரி ஆம்பர் ரூத் ராஜினாமா செய்துள்ளார். #AmberRudd
குடியேற்ற விவகாரத்தில் முறைகேடு - பிரிட்டன் உள்துறை மந்திரி ஆம்பர் ரூத் ராஜினாமா
Published on

லண்டன்:

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் கரீபியன் தீவுகளில் இருந்து வந்து குடியேறியவர்களில் பலருக்கு பிரிட்டனில் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்கள் மறுக்கப்பட்டது. பிரிட்டனில் வாழ்வதற்கு உரிய ஆவணங்களை அவர்கள் வைத்திருக்காவிடில் மீண்டும் நாடுகடத்தப்படுவார் என அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

நீண்ட நாள் பிரிட்டன் வாசிகளை சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை அடுத்து, உள்துறை மந்திரி ஆம்பர் ரூத் பதவி விலக வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.

அதிக அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக ஆம்பர் ரூத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. #AmberRudd

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com