இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு ஜூலை 31-ந் தேதி வரை விசா நீட்டிப்பு

இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31-ந் தேதி வரை இங்கிலாந்து அரசு நீட்டித்துள்ளது.
இங்கிலாந்து விசா
இங்கிலாந்து விசா
Published on

லண்டன்:

இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31-ந் தேதி வரை இங்கிலாந்து அரசு நீட்டித்துள்ளது. இது குறித்து உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வெளிநாட்டவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியாவிட்டால் அவர்கள் ஜூலை 31-ந் தேதி வரை இங்கிலாந்தில் தங்கி இருக்க முடியும். விசா நீட்டிப்புக்காக உள்துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டவர்கள் விமானம் மற்றும் எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் விரைவில் சொந்த நாடுகளுக்கு திரும்புவார்கள்.

மேலும், இங்கிலாந்தில் நீண்ட காலம் தங்குவதற்காக விசாக்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகள் ஜூலை 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com