லெபனானில் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி கற்பழித்துக் கொலை

லெபனானில் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிபேகா டைகி
ரிபேகா டைகி
Published on

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இங்கிலாந்து தூதரகம் உள்ளது. இங்கு ரிபேகா டைகி (30) என்ற பெண் அதிகாரியாக இருந்தார்.

இவர் திடீரென மாயமாகிவிட்டார். எனவே இவரை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பெய்ரூட்டில் தேசிய நெடுஞ்சாலை அருகே பிணமாக கிடந்தார்.

அதை தொடர்ந்து அவரது உடலை போலீசார் மீட்டனர். பின்னர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிகாரி ரிபேக்கா கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com