நிரவ் மோடியின் ஜாமீன் மனு - லண்டன் கோர்ட் 5வது முறையாக நிராகரிப்பு

நிரவ் மோடி சார்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட் ஐந்தாவது முறையாக நிராகரித்துள்ளது.
நிரவ் மோடி
நிரவ் மோடி
Published on

லண்டன்:

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

தற்போது லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

இதற்கிடையே, நிரவ் மோடி சார்பில் நேற்று மீண்டும் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்த மனு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த லண்டன் கோர்ட், அவரது ஜாமீன் மனுவை ஐந்தாவது முறையாக மீண்டும் நிராகரித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com