சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 9 கோடி டாலர் வழங்க மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

சிங்கப்பூரைச் சேர்ந்த விமான நிறுவனத்திற்கு 9 கோடி அமெரிக்க டாலர் வழங்குமாறு விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #VijayMallya #KingFisher
சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 9 கோடி டாலர் வழங்க மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு
Published on

லண்டன்:

தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்து தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். மத்திய அரசு அவர் மீது தொடர்ந்த மோசடி வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அதன் விசாரணைகளிலும் மல்லையா ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு 4 விமானங்கள் வாங்குவதற்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் விஜய் மல்லையா ஒப்பந்தம் செய்துள்ளார். மூன்று விமானங்கள் டெலிவரி ஆகிவிட்ட நிலையில், அதற்கான பணத்தை மல்லையா கொடுக்கவில்லை.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் கடந்த 5-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் 9 கோடி அமெரிக்க டாலர்களை மல்லையா வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஏற்கனவே, கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விஜய் மல்லையா இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளார். #VijayMallya #KingFisher

X

Maalai Malar
www.maalaimalar.com