உடுமலை பி.ஏ.பி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

உடுமலை பி.ஏ.பி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Published on

கோவை:

பீகாரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவர் உடுமலை பூங்காமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் குடும்பத்துடன் தங்கி ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் ரோகித் குமார் (வயது 8). அருகில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று ரோகித் குமார் பூங்கா முத்தூர் பகுதியில் உள்ள பி.ஏ.பி வாய்க்கால் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தடுமாறி வாய்க்காலில் விழுந்தார்.அப்போது தண்ணீர் அவரை அடித்து சென்றது.

இதில் ரோகித் குமார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். வெகுநேரமாகியும் ரோகித் குமார் வீட்டுக்கு திரும்பி வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.

அப்போது பி.ஏ.பி வாய்க்காலில் ரோகித் குமார் உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து ஆழியார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com