கர்நாடகாவுக்கு கூடங்குளம் மின்சாரத்தை அனுப்பக்கூடாது- சுப.உதயகுமார்

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தர மறுத்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகாவுக்கு, கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் வழங்க கூடாது என்று உதயகுமார் தெரிவித்தார்.
கலெக்டர் அலுவலகத்திற்கு சுப.உதயகுமார் மனு கொடுக்க வந்த காட்சி.
கலெக்டர் அலுவலகத்திற்கு சுப.உதயகுமார் மனு கொடுக்க வந்த காட்சி.
Published on

நெல்லை:

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தலைமையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு வக்கீல் ரமேஷ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பின்னர் சுப.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடங்குளம் அணு உலையை சுற்றி 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு எவ்வளவு மக்கள் தொகை உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்ட மனுவுக்கு இதுவரை சரியான பதில் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வரவில்லை.

எனவே கூடங்குளத்தில் 3, 4, 5, 6 அணு உலைகளை அமைக்க கூடாது. கூடங்குளத்தில் அணு கழிவு சேகரிப்பு மையம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தர மறுத்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகாவுக்கு, கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் வழங்க கூடாது. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #CauveryManagementBoard

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com