ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொண்டு விஜயபாஸ்கர் மீண்டு வருவார் - ஆர்.பி.உதயகுமார்

ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டு வருவார் என்று அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்தார். #Incometax #MinisterVijayabaskar
ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொண்டு விஜயபாஸ்கர் மீண்டு வருவார் -  ஆர்.பி.உதயகுமார்
Published on

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு மாறாக எதிர்க்கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். உண்மையும், ஆதாரமும் இல்லாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதையும் கூற மாட்டார்.

ஊழல் புகாரினை சட்ட ரீதியாக எதிர்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் அதில் இருந்து மீண்டு வருவார். அவரை பதவி விலகச் சொல்பவர்கள் முன் உதாரணமாக இருந்துள்ளார்களா? என நினைத்து பார்க்க வேண்டும்.

ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை பார்த்து அரசியலுக்கு வர வேண்டும். நாடி ஜோசியம் பார்க்கக்கூடாது. தினகரன் தனது நலனை முன்னிலைப்படுத்தியே செயல்படுகிறார். மக்கள் நலனில் அவர் அக்கறை கொள்ளவில்லை.

அ.தி.மு.க.வுக்கு எதிரி தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தான்.

இவ்வாறு அவர் கூறினார். #Incometax #MinisterVijayabaskar

X

Maalai Malar
www.maalaimalar.com