உரிமம் புதுப்பிக்க மறுப்பு: லண்டன் போக்குவரத்து நிர்வாகத்திற்கு எதிராக உபேர் மனு

லண்டன் நகரில் உபேர் கால் டாக்ஸிகளை இயக்க போக்குவரத்து நிர்வாகம் உரிமம் புதுப்பிக்காத நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது
உரிமம் புதுப்பிக்க மறுப்பு: லண்டன் போக்குவரத்து நிர்வாகத்திற்கு எதிராக உபேர் மனு
Published on

லண்டன்:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபல கார் புக்கிங் நிறுவனம், உபேர். இந்த நிறுவனத்தின் 'ஆப்'பை பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசியின் மூலம் கார் புக்கிங் செய்யலாம். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இயங்குவதற்காக அந்தந்த நாட்டு அரசிடம் அனுமதி பெற்று உரிமம் பெற வேண்டும்.

லண்டனில் இந்நிறுவனத்தின் உரிமம் கடந்த மாதம் காலாவதியனது. உபேரின் அணுகுமுறை மற்றும் நடத்தையானது அந்நிறுவனத்தின் பெருநிறுவன பொறுப்பில்லாமையை நிரூபிக்கின்றது. மேலும், பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை என காரணம் கூறி இந்த உரிமத்தை புதுப்பிக்க அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து லண்டன் நகரில் இந்நிறுவனம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லண்டன் போக்குவரத்து நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக உபேர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. லண்டன் நகரில் மட்டும் 35 லட்சம் பயணிகள் தங்களது நிறுவனத்தின் டாக்ஸியை பயன்படுத்தி வந்ததாகவும், 40 ஆயிரம் ஓட்டுநர்கள் பணியாற்றி வந்ததாகவும் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com