U19 உலக கோப்பை: பாகிஸ்தானை 10 விக்கெட்டில் துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்து இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சக்சேனா, ஜெய்ஸ்வால்
சக்சேனா, ஜெய்ஸ்வால்
Published on

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 172 ரன்னில் சுருண்டது.

பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரது விக்கெட்டையும் வீழ்த்த பாகிஸ்தான் இளைஞர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் பலன் அளிக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com