

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா அதர்வா டைட் (177), பவன் ஷா (282) வதேரா (64) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 128.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 613 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை இளைஞர்கள் அணி 316 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இலங்கை அணியின் சூரியபந்தாரா 115 ரன்னும், தினுஷா 51 ரன்னும், மெண்டிஸ் 49 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் ஜங்கா அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பவன் ஷா
இந்தியா பாலோ-ஆன் கொடுத்ததால் இலங்கை அணி 297 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.