இளையோர் கிரிக்கெட்: இங்கிலாந்தை 334 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இங்கிலாந்தை 334 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய இளையோர் அணி.
இளையோர் கிரிக்கெட்: இங்கிலாந்தை 334 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
Published on

19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் கடந்த 23-ந்தேதி செஸ்டர்பீல்டு குயின்ஸ் பார்க்கில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய இளையோர் அணி முதலில் களம் இறங்கியது. மனோஜ் கோல்ரா (122), பிபி ஷா (86), விக்கெட் கீப்பர் தேசாய் (89), ஆர்.பி. தாஸ் (68), ஷவம் மாவி (அவுட்டாகாமல் 41) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 519 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து இளைஞர் அணி சார்பில் டங்க், ப்ரூக்ஸ், விர்டி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேக்ஸ் அதிகபட்சமாக 46 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் நகர்கோடி 5 விக்கெட்டும், ஷிவம் மாவி 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் 324 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்திய அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. பிபி ஷா (69), ஆர்.பி. தாஸ் (50) ஆகியோரின் பேட்டிங்கால் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதனால் இந்திய இளையோர் அணி 497 ரன்கள் முன்னிலைப் பெற்றது. ஆகவே, இங்கிலாந்து இளையோர் அணிக்கு 498 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இமாலய இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 163 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் ஹோல்டன் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து இளைஞர் அணி 163 ரன்னில் சுருண்டதால், இந்தியா 334 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com