தர்மபுரியில் 2 லாரிகள் மோதல் - 2 பேர் உயிரிழப்பு

தர்மபுரியில் இன்று அதிகாலை 2 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் 2 லாரிகள் மோதல் - 2 பேர் உயிரிழப்பு
Published on

தர்மபுரி:

ஆந்திர மாநிலத்தில் இருந்து முலாம் பழம் லோடு ஏற்றிக்கொண்டு மினிலாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலை பழைய தர்மபுரி அருகேயுள்ள தனியார் பள்ளி முன்பு வரும்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதியது.

அப்போது மோதிய வேகத்தில் மினி லாரி மறு பக்கத்தில் சேலம்-கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மினிலாரியில் இருந்த ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்துள்ள பகை மாரகுட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது20), சந்தம் (20) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த லாரி டிரைவர்களான சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (40), அய்யன்துரை (35) ஆகிய 2 பேருக்கும் பலத்த படுகாயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த சிவக்குமார், அய்யன்துரை ஆகிய 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். மினிலாரியில் இருந்த முலாம் பழம் சாலையில் சிதறி கிடந்தது. மேலும் மினிலாரியின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. லாரியின் முன் பகுதியில் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ரமேஷ், சந்தம் ஆகிய 2 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் சேலம்-கிருஷ்ணகிரி சாலையில் இன்று அதிகாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விபத்தில் சிக்கிய 2 வாகனத்தையும் மீட்டு அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்தை சரி செய்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com